முருகன் பாட்டு

மருதமலை மேல் இருக்கும் முருகனைப் பாடு
மனசெல்லாம் நிறைந்திருக்கும் முருகனைப் பாடு
மருதமலை சென்று வந்தால் இனி இல்லை கேடு
முருகனின் பாதத்தை மனமே இனி நாடு
ஆறுபடை கோவில்கள் அவனது வீடு
அவற்றை மட்டும் தேடியே அணுகியே ஒரு
அள்ளித்தரும் தெய்வம் அவனுக்கு இல்லை ஈடு
முருகனின் சன்னிதியில் ஆனந்தம் தேடு
தலைஎழுத்தை மாற்றிவிடும் திருப்புகழ் ஏடு
ஒருநாள் கட்டாயம் செல்வோம் உடல் சுடும் காடு
அதற்குள் ஒரு நாளவது அலகு போடு
அன்பவர்கள் மத்தியில் அனைவரும் கூடு

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

திருச்சந்த விருத்தம்

பல்லவி
திருச்சந்த விருத்தம் தந்த
திருமழிசைபிரான் வாழியே – திருச்சந்த விருத்தம்

அனுபல்லவி
திருமால் கொண்டது பல கோலம் – அதில்
திருசயனம் பற்றிய பாடல்கள் பலஉள்ள – திருச்சந்த விருத்தம்

சரணம்
பக்தி பாசனம் செய்யச் சொன்னார் – இவர்
முக்தி பெற வழி இதுவே அன்றே சொன்னார்.
சக்தி பெற வேண்டுமெனில் திருமால் பாதம்கதி
உக்தி இதுவே பிரபந்தங்களின் வழிநின்று – திருச்சந்த விருத்தம்

—-பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்

பெருமாள்

பல்லவி
பள்ளி கொண்ட பெருமான் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
– பள்ளி கொண்ட

அனுபல்லவி
துள்ளி வரும் காவேரி கரையில்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்
வள்ளி முருகனின் மாமன் அவர்
பள்ளி கொண்ட பெருமாள் – நமக்கு
அள்ளி அருளைத் தருவார்

சரணம்
ஆழ்வார்கள் பாடிய அருள் அரங்கன்
பாழ்வான வாழ்வு மாற அருள் அரங்கன்
தாழ்வான நிலை மாறும் அவன் அருள் சுரந்தால்
வாழ்வான வாழ்வு வாழ பிரபந்தம் பாடுவோம்

—பேரா.முனைவர் வே.வெ.மீனாட்சி ஜெயக்குமார்