கதிரவன் கவசம்

கதிரவன் கவசம்

ஞான ஆசிரியன் நீயே ஞாயிறு தேவா

ஞான ஆசிரியன் நீயே

மோனமாய் கல்வி  புகட்டும் சிவனின் ரூபம் நீயே

கானமாய் கலைகள் அருளும் கண்ணனின் ரூபம்  நீயே

ஆன சுகம் தந்திடுவாய் தன் பாதிரி ரூபம் நீயே – சுப

மான எல்லாம் தந்தே அருளும் ஆரோக்கிய தேவன் நீயே

Prof. V.V. Meenakshi Jayakumar

ஆதவனைப் போற்றிடுவோம்

ஆதவனைப் போற்றிடுவோம்

ஞாயிறு போற்றுதுல்

எடுப்பு

கண் கண்ட தெய்வமே கலியுக வரதே

கதிரவா உமக்கு எம் வணக்கம்

தொடுப்பு

விண்ணாளும் வேந்தன் நீ வேதாந்த ரூபன் நீ

கதிரவா உமக்கு எம் வணக்கம்

முடிப்பு

மண் தழைக்க மழை அருள்வாய் வாழ்க நீயே

கண் செழிக்க வரம் அருள்வாய் வாழ்க நீயே

தண் நிகர் குளிர் மதி வருமே உன்னாலே

பண் கொண்டு பாடுகிறோம் அருள்வாய் நீயே

Prof. V.V. Meenakshi Jayakumar

இராவணன்

இராவணன்

எடுப்பு

இராவணன்

மூவுலகின் மன்னன் நானடி சீதாதேவி நீ கேள்

மூவுலகின் மன்னன் நானடி

தொடுப்பு

ஏவும் பணியாட்கள் கோடி

ஏனிந்த கோபம் வாடி

காவு கொள்வேன் எனை எதிர்ப்போரை

காணு கொஞ்சம் எந்தன் முகமே

மூவுலகின்

முடிப்பு

யானை எட்டினை வென்றவன் நானே

மானை அனுப்பியே மயக்கினேன் உன்னை

பானை வயிறு கும்பகர்ணன் என் தம்பி

ஏனைய சொல்லி என் பயன்? இதோ பார்.

Prof. V.V. Meenakshi Jayakumar

கனவிலும்

கனவிலும்

எடுப்பு

கனவிலும் நினைக்கவில்லை கண்ணாளா

உனைப் பிரிவேன் என – கனவிலும்

தொடுப்பு

எனதுயிர் கண்மணியே தசரதன் மைந்தனே

உனதுயிர் நான் இங்கே தவிக்க எங்கு நீ தேடுகிறாயோ

முடிப்பு

பத்து தலை இராவணன் பித்து பிடித்து அலைகிறான்

ஏத்து உன் கோதண்டத்தை சாத்து அவன் மார்பினை நோக்கி

கனவிலும்

Prof. V.V. Meenakshi Jayakumar

எங்கே காண்பேன் என் இனிய ஜானகியை

எங்கே காண்பேன் என் இனிய ஜானகியை

எடுப்பு

எங்கே காண்பேன் என் இனிய ஜானகியை

மங்கையரில் புகழ் கொண்ட இனிய ஜானகியை

தொடுப்பு

அங்கே இங்கே தேடி இளைத்தேன்

சங்கு போன்ற கழுத்தை உடைய ஜானகியை

எங்கே

முடிப்பு

பங்கு வேண்டாம் இராஜ்ஜியத்தில்

பாங்குடைய என் ஜானகி போதும்

பொங்கும் இன்பம் தேடி வரும்

வீங்கிள வேனில் போன்ற என் ஜானகி வந்தால் கண்டால் போதும்

Prof. V.V. Meenakshi Jayakumar

வாழி வாழி

வாழி வாழி

hanuman

எடுப்பு

வாழி வாழி அனும – நீ என்றும்

வாழி வாழி அனும

தொடுப்பு

ஆழி சூழ் இலங்கை நகர் வந்து கணை

யாழி எனக்களித்த நீ வாழி வாழி

முடிப்பு

வானரங்கள் தலைவா – இராமநாம

பானமே செய்யும் அனும

ஆன மட்டில் விரைவில் வந்து

மானமுள்ள என்னைக் காக்க இராமனிடம் விரைந்து நீ சொல்

வாழி வாழி

Prof. V.V. Meenakshi Jayakumar

ஓங்கார டமருகம் ஒலி கேட்போம்

ஓங்கார டமருகம் ஒலி கேட்போம்

Shiva

எடுப்பு

ஓங்கார டமருகம் ஒலி கேட்போம்

ஓங்கார டமருக ஒலி கேட்போம் நாமே

ஓடிடும் தீவினை நம்மை விட்டு

ஓங்கார டமருக ஒலி கேட்போம் நாமே

தொடுப்பு

நீங்கிடும் வினையெல்லாம் நன்மையே நடக்கும்

ரீங்காரம் கேட்குமே ரீங்காரமாய்க் கேட்கும் ஓங்கார நாதம்

 – ஓங்கார

 

முடிப்பு

ஏங்காதே மனமே நல்லதே நடக்கும்

பாங்கான சுந்தரி மணாளன் நம்மைக் காப்பான்

தாங்காமல் அழுதால் தயவுடன் பார்ப்பான்

ரீங்கார மந்திரத்தில் மனமும் மகிழ்வான்

– ஓங்கார

Prof. V.V. Meenakshi Jayakumar

பாரதியே சரணம்

பாரதியே சரணம்

எடுப்பு

பாரதியே சரணம் – அம்மா கலை

பாரதியே சரணம்

தொடுப்பு

ஹாரதி எடுத்தோம் உனக்கு மாரதி நீயே

ஹாரதி எடுத்தோம்  உனக்கு மாரதி நீயே

சாரதியாய் இருந்து என் கலை வாழ்வை நடத்து நீயே

சாரதியாய் இருந்து கலை வாழ்வு நடத்து

முடிப்பு

அங்கத்தில் கலைகளை கொண்டவளே சரணம்

சங்கத்தில் திருவையும் கொண்டவளே சரணம்

திங்களைத் தலை கொண்ட நாயகி தோழியே

மங்களம் அளிப்பாய் நாரதன் தாயே சரணம்

Prof. V.V. Meenakshi Jayakumar

எல்லையில்லாத இன்பம் தருவாய்

எல்லையில்லாத இன்பம் தருவாய்

Shiva

எடுப்பு

எல்லையில்லாத இன்பம் தருவாய்

ஈசா ஈசா என் உயிர் ஈசா

தொடுப்பு

இல்லை இனி துன்பம் என்று நீ சொல்வாய் (2)

அல்லும் பகலும் என்னை காத்து ரக்ஷிப்பாய் (2)

எல்லையில்லாத

முடிப்பு

மன்றுள் ஆடும் மாணிக்க தேவே

கன்று நான் என்றும் உனக்கே காத்திடுவாய்!

அன்றும் இன்றும் நீயே என் தலைவன்

நன்றும் தீதும் உன் செயலாகும் நான் செய்யும்

நன்றும் தீதும் உன் செயலாகும்.

எல்லையில்லாத

Prof. V.V. Meenakshi Jayakumar

மானே மானே

எடுப்பு

மானே மானே கோபம் ஏனோ?

தேனே தேனே உனையே தேடி வந்தேன் நானே – மானே மானே

தொடுப்பு

மாசில்லா மனம் கொண்ட உயிர்த் தோழி நீயே

தூசில்லா செயல் புரிபவளும் நீயே

காசில்லாதவரை கண்கொண்டு காணுமோ – உலகம்

ஏசில்லாதபடி எனைக் காக்கும் உன் கருணை ஏனோ?

முடிப்பு

மந்த நாசம் செய்யும் முறுவல் கொண்டாயோ

அந்த அன்னம் பழி சொல்லும் நடையும் கொண்டாயோ

பந்த பாசமெல்லாம் பல நூறு தந்தாயே

சொந்தமான பின்பும் தயக்கம் இனி ஏனோ?

– மானே

Prof. V.V. Meenakshi Jayakumar