Karthikeyan

கார்த்திகேயன்

karthikeyan

கங்கையின் புதல்வன் கார்த்திகேயன்

மங்கையர் வணங்கிய  வள்ளி மணாளன்

பங்கையர் கண்ணி தேவானை நாயகன்

சங்கையர் நாதன் வடிவில் உள்ளோன்

 

எங்களின் குலதெய்வம் முருகப் பெருமான்

உங்களின் துயர் நீக்கும் கருணைக்கடவுள்

திங்களின் மேனி உடைய வள்ளியின்

பங்கினில் உறையும் பரம குருநாதன்

 

அங்கையில் வேல்கொண்டு ஆடும் முருகன்

எங்கேயும் எங்களை காக்கும் தெய்வம்

மங்கையரின் புகழ் கீர்த்தி வாய்ந்த

ஓங்கு புகழ் பாடும் அருணகிரிநாதர்

Prof. V. V. Meenakshi Jayakumar

போற்றி ஓம் நமச்சிவாய

போற்றி ஓம் நமச்சிவாய

 Shiva

போற்றி ஓம் நமச்சிவாய

புயங்கனே மயங்கு கின்றேன்

போற்றி ஓம் நமச்சிவாய

புகல் இடம் பிறிது ஒன்று இல்லை

போற்றி ஓம் நமச்சிவாய

புரம் எனைப் போக்கல் கண்டாய்

போற்றி ஓம் நமச்சிவாய

சய சய போற்றி போற்றி

ஒருவனே போற்றி ஒப்பு இல் அப்பனே போற்றி

குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி

வருக என்று என்னை நின் பால்

வாங்கிட வேண்டும் போற்றி

தருக நின் பாதம் போற்றி

தமியனேன் தனிமை தீர்ந்து

Prof. V. V. Meenakshi Jayakumar

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

Murugar

பாப்பா பாப்பா சொல்லு பாப்பா (2)

கந்தா குமரா என்றே சொல்லு பாப்பா

இப்போ அப்போ எப்போதும் சொல்லு பாப்பா

கார்த்திகை குமரன்பேர் சொல்லு பாப்பா

நில்லு பாப்பா நீ நில்லு பாப்பா

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

 

கந்தா குமரா என்று நீ சொல்லு பாப்பா

அல்லும் பகலும் சொல்லு பாப்பா

வள்ளி மணாளன் பெயர் நீ சொல்லு பாப்பா

நில்லு பாப்பா நீ நில்லு பாப்பா

 

நித்தமும் அவன் புகழ்  பாடு பாப்பா

நல்லதெல்லாம் தானே வரும் நம்பு பாப்பா

நீதி நெறியின் பக்கம் நில்லு பாப்பா

 

பாரு பாப்பா நீ பாரு பாப்பா

பாங்கான முருகனை  பாரு பாப்பா

ஆறு முகன் அவனே தெய்வம் நம்பு பாப்பா

ஆவினன் குடி வந்து பாரு பாப்பா

 

ஓடு பாப்பா நீ ஓடு பாப்பா

ஓங்கார பரமன் அடி தேடி ஓடு பாப்பா

ஆடு பாப்பா நீ ஆடு பாப்பா

ஆடும் மயில் சோலை வந்து ஆடு பாப்பா

சொல்லு பாப்பா நீ சொல்லு பாப்பா

முருகன் என் தெய்வம் என்று சொல்லு பாப்பா

 

கல்லு பாப்பா நீ கல்லு பாப்பா

கருணை இல்லா உள்ளம் கொண்டால் கல்லு பாப்பா

வெல்லு பாப்பா நீ வெல்லு பாப்பா

வேலுண்டு வினையில்லை வெல்லு பாப்பா

வேண்டாத காமத்தை கொல்லு பாப்பா

வேலன் திருவடி கதியென நில்லு பாப்பா

 

முனைவர். வே. வெ. மீனாட்சி ஜெயக்குமார்

முருகன்

முருகன்

kili murugan

கிளியே  கிளியே  அருகில் வா

கிளர்ச்சி  பொங்க  அருகில் வா

கிளியே கிளியே  நீ பாடு

கிள்ளைத் தமிழில்  நீ பாடு

முருகா குமரா  என்றே நீ

உருகி மருகி   நீ பாடு

கந்தா கடம்பா  என்றே நீ

மந்தாகினி  போல  நீ பாடு

வள்ளி கணவன்  அவன் பெயரை

துள்ளி துள்ளி  நீ பாடு

தெய்வானை மணாளன்  அவன் பெயரை

தாய்ப்பாசம் பொங்கிட நீ பாடு

அன்பே அருளே அவன் வடிவம்

அருளும் பொருளும் அவன் தருவான்

பண்கொண்டு பாமாலை  நீ பாடு

பண்ணார் மொழியில் நீ பாடு

கிளியே கிளியே அருகில் வா

Prof. V. V. Meenakshi Jayakumar

 

இராமன்

இராமன்

இராமன்

 

எடுப்பு

குலதெய்வம் இராமன் அருளுண்டு நமக்கு

பலகாலும் சொல்கிறேன் பவபயமில்லை

                                                                        – குலதெய்வம்

 

தொடுப்பு

சிலகாலம் துதித்தாலும் போதுமே – நாளில்

சிலகாலம் துதித்தாலும் போதுமே – இராமனருள் முன்னிற்கும் என்றுமே

– குலதெய்வம்

முடிப்பு

பவசாகரம் கரையேற வைப்பான் இராமன்

தவயோக வாழ்வு தந்து காப்பான் இராமன்

லவகுசனின் தந்தையவன் சீதா இராமன்

சிவயோகம் தந்திடுவான் தசரத இராமன்

– குலதெய்வம்

Prof. V. V. Meenakshi Jayakumar

ஏறுமயில்

ஏறுமயில்

ஏறுமயில்

ஆகமும் சாஸ்திரமும் தேடு பொருள் நீயே

பாகம் ஒரு பெண்ணாகி நின்றவனும் நீயே

 

ஏகன் அநேகன் ஆகி இருப்பவனும் நீயே

தாகமென வருவோர்க்குத் தண்ணீரும் நீயே

 

காகமும் மயிலுமாய் இருப்பவனும் நீயே

யோகமும் போகமுமாய் உள்ளவனும் நீயே

 

காரணமும் காரியமும் ஆனவனும் நீயே

நாரணனும் நான்முகனும் ஆனவனும் நீயே

 

பூரணனும் புண்ணியனும் வேதியனும் நீயே

ஆரணனும் சாரணனும் ஆனவனும் நீயே

 

தோடுடைய செவியனும் கொற்றவையும் நீயே

வீடுடைய தலைவனும் தலைவியும் நீயே

 

ஆடுடைய குபேரனும் லஷ்மியும் நீயே – பண்

பாடுடைய தமிழ்நாட்டின் தெய்வமும் நீயே

 

Prof. V. V. Meenakshi Jayakumar

அருவி

அருவி

அருவி

அருவியாகிறேன் நான் அருவியாகிறேன்

ஆம் அம்மா நீர் உணர்ந்தது உண்மை தான்

இடர்களை களைவேன் நான்

ஈங்கு எனக்கென்று ஒரு பாதை வகுப்பேன்

உயர்ந்த இடத்தில் பிறந்து வந்தேன் – நான்

ஊர் போற்ற பரந்து விரிகிறேன்

எண்ணில்லா தடைகளை நான்

ஏற்றமுடன் கடந்து வருகிறேன்

ஐம்புலன்களையும் அடக்கி வருகிறேன் – நான்

ஒலி பல எழுப்பி வருகிறேன்

ஓடி ஓடி ஆடி வருகிறேன்

ஔடதம் பல என்னில் கொண்டு வருகிறேன்

அகிலம் பார்த்து விரிந்து வருகிறேன்

காஞ்சி மகா பெரியவரின் ஆசி பெற்று வருகிறேன்.

 

Prof. V. V. Meenakshi Jayakumar

Happy Pongal to all

பொங்குக!! பொங்கல்!!

 

 

நெற்பல பொலிக! பொன்பெரிது சிறக்க!

விளைக வயலே! வருக இரவலர்!

பால்பல ஊறுக! பகடுபல சிறக்க!

பகைவர்புல் லார்க! பார்ப்பார் ஓதுக!

பசிஇல் லாகுக! பிணிசேண் நீங்குக!

வேந்துபகை தணிக! யாண்டுபல  நந்துக!

அறம்நனி சிறக்க! அல்லது கெடுக!

அரசுமுறை செய்க! களவில் லாகுக!

நன்று பெரிதுசிறக்க! தீதில்  லாகுக!

மாரி வாய்க்க! வளநனி சிறக்க!

– ஐங்குறுநூறு

 

பொங்கல் நல்வாழ்த்துகள்

 

Prof.V.V.Meenakshi Jayakumar

 

 

Mangalam Ramar, Guru, Sivan and Hanuman

பல்லவி

மங்களம் மங்களம் சங்கர குருவிற்கு மங்களம்

செய மங்களம் சுப மங்களம் ஜெய மங்களம் என்றும் சுப மங்களம்

அனுபல்லவி

தங்கும் இன்பம் பேரின்பமாக

எங்கும் இனிமேல் மங்களம்

பங்கில் உமையை கொண்ட பரமன்

எங்கள் குறைதீர்க்க குருவாய் வந்தார் – மங்களம்

சரணம்

வீங்கிய தாடை உடைய அனுமன்

பாங்கிய அழகில் நின்ற அனுமன்

ஓங்கிய புகழை கொண்ட அனுமன்

தூங்கும் ஆன்மாவை எழுப்பும் அனுமன் – மங்களம்

  • Prof.V.V.Meenakshi Jayakumar

Guru My Guru

பல்லவி

குருபக்தி செய்வாய் மனமே – தினமே

குருபக்தி செய்வாய் மனமே – குருபக்தி

அனுபல்லவி

குருபக்தி செய்ய செய்ய வினை அகற்றிடும்

குருபக்தி செய்ய செய்ய வினை கழிந்திடும் – குருபக்தி

சரணம்

உருவம் கொண்டு வந்த இறைவனே குரு அவர்

மருமாசு ஏதுமின்றி குருவைச் சரணடை

கருவினைத் தோன்றாமல்  காக்கும் கண்கண்ட தெய்வம்

இருவினைத் தீர்த்து இறைவன் தான் சேர்க்கும் எனவே

Prof. V.V.Meenakshi Jayakumar