Today’s special – new day – new life

NEW DAY – NEW LIFE – GET UP – WAKE UP – DO YOUR DUTY

 

காலைக் கதிரவன் உதித்து விட்டான்

கண்மணி நீயும் துயில் எழுவாய்

காத்துள்ள கடமைகளை நீ செய்வாய்

கந்தன் முருகன் அருள் புரிவான்

 

கீச்சு கீச்சுசென்று கூவும் குயில்கள்

குரல்களை கேட்டு துயில் எழுவாய்

பறவைகள் கூவுவது நமக்காக

பாயும் ஆறும் நமக்காக

நாளும் பிறந்தது நமக்காக – நவ

கோளும் இருப்பது நலம் பயக்க

புத்துணர்ச்சியுடன் எழுந்திடுவாய்

புதுநாள் வந்தது மகிழ்ந்திடுவாய்

தவற்றை திருத்திக் கொள்ள

தவமேற்ப்பாய் தசரதன் மைந்தன்

தயைபுரிவான் துணையும் வருவான்

எழுவாய் மகனே நீ எழுவாய்

எழுவாய் மகளே நீ எழுவாய்

  • Prof. V. V. Meenakshi Jayakumar

திருவெம்பாவை

unnamed

 

திருவெம்பாவை

இராகம்: பௌளி                  தாளம்: ஆதி

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே

ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய்.

 

 

வேலவா

வேலவா

பன்னிருகை வடிவேலா பறந்தோடி நீயே வா வா

என்னிருகையால் தொழுதேன் உடனே நீ வா வா வா

அன்னத்தில் மேல் அமர்ந்த பிரமனிடம்

உன்னத ஓங்கார பொருள் கேட்பாய்

கன்னத்தில் கைவைத்தவர் தெரியாது என்ற போது

சன்னல் மட்டுமே கொண்ட ஒரு சிறையில் தான் அடைந்தாய்

உலகில் உற்பத்தி உடனே நின்ற போது

அலகில் ஜோதியான அம்பலவாணர் வந்து

தலமான சுவாமிமலையில் சீடனாக அமர்ந்து கேட்டார்

பல்வேறு குரு இருந்தாலும் தகப்பன்சாமி நீயே ஆனாய்

Prof. V. V. Meenakshi Jayakumar

சரஸ்வதி

சரஸ்வதி

எடுப்பு

வீணை வாசிக்கும் கலைவாணி தாயே – காலம்

வீணாக்காமல் நான் கலை பெற அருள்வாய்

தொடுப்பு

ஆணை உன்மேலே தாயே கலை தர வருவாய்

துணையாக வேண்டும் உந்தன் அருள் நிதி கொடையே

முடிப்பு

அணை போல் காத்திடுவாய் – சரஸ்வதி தாயே

கணையாழி போல் வந்து கையில் பலம் தருவாய்

சுணை என அருள் சுரந்து காப்பாய் எனையே

வீணை என் வாழ்வின் ஒரு அங்கமாக மாற – வரம் ஒன்று தருவாய்

Prof. V. V. Meenakshi Jayakumar

கந்தனே

கந்தனே

எடுப்பு

கந்தனே குமரா கார்த்திகை மைந்தா

மைந்தா காத்தருள் புரிவாய் நீயே

தொடுப்பு

கண்ணனின் மருகனே முருகனே குகனே

பண்ணமைத்து பாடும் எங்களைக் காக்க வா

-கந்தனே குமரா

முடிப்பு

விண்ணோர் முதல்வனே உமையவள் புதல்வனே

கண்மணியே வள்ளியின் காதலனே வேலவனே

அண்டமாகி அவனியாகி அறியொனா பொருளதாகி

தொண்டர்தம் குருவுமாகி துகளறு தெய்வமே – முருகனே

சண்முகனே பாம்பன் சுவாமிகளின் தலைவனே

தன்மணி முகம் கொண்ட தெய்வானை நாயகனே

-கந்தனே குமரா

Prof. V. V. Meenakshi Jayakumar

பரசுராமர்

பரசுராமர்

எடுப்பு

பரசுராமர் வந்தார் பார் ஆளும் வேந்தரின் கர்மமதை தீர்க்கவே – பரசுராமர் வந்தார்

தொடுப்பு

அரசர் குலத்தினை அடியோடு ஒழித்திட

கரமதில் கோடாரி கொண்டு தவம் புரிந்த – பரசுராமர் வந்தார்

முடிப்பு

ஜமத்தினி முனிவரின் திருமகனாய் தோன்றி

ஏமத்தில் ஜாமத்திலும் தந்தை சொல் காத்தார்

காமனை அழித்து வைணவ வில் கொண்டார்

ராமனுக்கு தன் வில்லை தந்தருள்  புரிந்த – பரசுராமர் வந்தார்

Prof. V. V. Meenakshi Jayakumar

நல்ல நல்ல செய்தி வரும்

நல்ல நல்ல செய்தி வரும்

நல்ல நல்ல செய்தி வரும் – இனி

நல்ல நல்ல செய்தி வரும்

மெல்ல மெல்ல அமைதி வரும் – இனி

மெல்ல மெல்ல அமைதி வரும்

சொல்ல சொல்ல இனிக்கும் நாமம் – அது ராமனின் திருநாமம்

கொல்ல கொல்ல வரும் யமனை தூர தூக்கிச் செல்லும் திரு நாமம்

Prof. V. V. Meenakshi Jayakumar

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

எடுப்பு

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

அஞ்ச மாட்டேன் எதற்கும் அஞ்ச மாட்டேன்

தொடுப்பு

கொஞ்சி பேசும் வள்ளி மணாளன் முருகனிடம்

தஞ்சமென்று சேர்ந்து விட்டேன் நான் – எனவே

முடிப்பு

பஞ்சு போல் பறந்திடும் பாவங்கள் எல்லாம்

எஞ்சி இருப்பது பண்ணிய புண்ணியங்கள் தானே

காஞ்சி வாழ் மஹா பெரியவா அருள் உண்டு என்றும்

வாஞ்சையுடனே அவர் உடன் காப்பார் எனவே

 – அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

Prof. V. V. Meenakshi Jayakumar

மனம் உருகுதையா

மனம் உருகுதையா

எடுப்பு

மனம் உருகுதையா – உன் பெயர் கேட்டாலே – என் மனம் உருகுதையா

தொடுப்பு

வனம் செல்ல தேவையில்லை – உனை துதிக்க

மனம் அதை அடக்கினாலே போதும் – என்

முடிப்பு

இனம் அதை நாடாமல் – அலையும் மனமே

கனம் பொருளும் தானே வரும் – உன் பெயர் துதித்தால் போதுமே

சனமும் புகழும் தன்னாலே தேடி வரும் உன் பெயர் துதித்தால் போதுமே

தனமும் அழகும் தானே வரும் – உன் பெயர் துதித்தால் போதுமே

    Prof. V. V. Meenakshi Jayakumar

தெய்வத் தமிழ் மொழி

தெய்வத் தமிழ் மொழி

tamil

அருமைத் தமிழ் மொழி

ஆன்மீகத்தின் அருள்மொழி

இயல் இசை நாடகம் கொண்ட மொழி

உயர்ந்த தமிழ் இது

ஊமையையும் பேச வைக்கும்

எண்ணெழுத்துக் கொண்டது

ஏற்றமளிப்பது

ஐங்கரன் தம்பி மொழி

ஒப்பில்லாத தமிழ்

ஓங்குமிசை கொண்ட தமிழ்

ஔவை தெய்வமாம் முருகன் பெயர் கொண்ட மஹா பெரியவா தெய்வத்தின் குரலாய் ஒலித்த மொழி..

தமிழே..   தமிழே..    அன்னையே.

உன்னை வணங்கி வாழ்த்துகிறேன்..

எங்கள் எண்ணத்திலும்,

நாவிலும் செயலிலும் வந்து வாழ்வருள்..

Prof. V. V. Meenakshi Jayakumar