சரஸ்வதி

சரஸ்வதி

எடுப்பு

வீணை வாசிக்கும் கலைவாணி தாயே – காலம்

வீணாக்காமல் நான் கலை பெற அருள்வாய்

தொடுப்பு

ஆணை உன்மேலே தாயே கலை தர வருவாய்

துணையாக வேண்டும் உந்தன் அருள் நிதி கொடையே

முடிப்பு

அணை போல் காத்திடுவாய் – சரஸ்வதி தாயே

கணையாழி போல் வந்து கையில் பலம் தருவாய்

சுணை என அருள் சுரந்து காப்பாய் எனையே

வீணை என் வாழ்வின் ஒரு அங்கமாக மாற – வரம் ஒன்று தருவாய்

Prof. V. V. Meenakshi Jayakumar

கந்தனே

கந்தனே

எடுப்பு

கந்தனே குமரா கார்த்திகை மைந்தா

மைந்தா காத்தருள் புரிவாய் நீயே

தொடுப்பு

கண்ணனின் மருகனே முருகனே குகனே

பண்ணமைத்து பாடும் எங்களைக் காக்க வா

-கந்தனே குமரா

முடிப்பு

விண்ணோர் முதல்வனே உமையவள் புதல்வனே

கண்மணியே வள்ளியின் காதலனே வேலவனே

அண்டமாகி அவனியாகி அறியொனா பொருளதாகி

தொண்டர்தம் குருவுமாகி துகளறு தெய்வமே – முருகனே

சண்முகனே பாம்பன் சுவாமிகளின் தலைவனே

தன்மணி முகம் கொண்ட தெய்வானை நாயகனே

-கந்தனே குமரா

Prof. V. V. Meenakshi Jayakumar

பரசுராமர்

பரசுராமர்

எடுப்பு

பரசுராமர் வந்தார் பார் ஆளும் வேந்தரின் கர்மமதை தீர்க்கவே – பரசுராமர் வந்தார்

தொடுப்பு

அரசர் குலத்தினை அடியோடு ஒழித்திட

கரமதில் கோடாரி கொண்டு தவம் புரிந்த – பரசுராமர் வந்தார்

முடிப்பு

ஜமத்தினி முனிவரின் திருமகனாய் தோன்றி

ஏமத்தில் ஜாமத்திலும் தந்தை சொல் காத்தார்

காமனை அழித்து வைணவ வில் கொண்டார்

ராமனுக்கு தன் வில்லை தந்தருள்  புரிந்த – பரசுராமர் வந்தார்

Prof. V. V. Meenakshi Jayakumar

நல்ல நல்ல செய்தி வரும்

நல்ல நல்ல செய்தி வரும்

நல்ல நல்ல செய்தி வரும் – இனி

நல்ல நல்ல செய்தி வரும்

மெல்ல மெல்ல அமைதி வரும் – இனி

மெல்ல மெல்ல அமைதி வரும்

சொல்ல சொல்ல இனிக்கும் நாமம் – அது ராமனின் திருநாமம்

கொல்ல கொல்ல வரும் யமனை தூர தூக்கிச் செல்லும் திரு நாமம்

Prof. V. V. Meenakshi Jayakumar

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

எடுப்பு

அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

அஞ்ச மாட்டேன் எதற்கும் அஞ்ச மாட்டேன்

தொடுப்பு

கொஞ்சி பேசும் வள்ளி மணாளன் முருகனிடம்

தஞ்சமென்று சேர்ந்து விட்டேன் நான் – எனவே

முடிப்பு

பஞ்சு போல் பறந்திடும் பாவங்கள் எல்லாம்

எஞ்சி இருப்பது பண்ணிய புண்ணியங்கள் தானே

காஞ்சி வாழ் மஹா பெரியவா அருள் உண்டு என்றும்

வாஞ்சையுடனே அவர் உடன் காப்பார் எனவே

 – அஞ்ச மாட்டேன் இனி அஞ்ச மாட்டேன்

Prof. V. V. Meenakshi Jayakumar

மனம் உருகுதையா

மனம் உருகுதையா

எடுப்பு

மனம் உருகுதையா – உன் பெயர் கேட்டாலே – என் மனம் உருகுதையா

தொடுப்பு

வனம் செல்ல தேவையில்லை – உனை துதிக்க

மனம் அதை அடக்கினாலே போதும் – என்

முடிப்பு

இனம் அதை நாடாமல் – அலையும் மனமே

கனம் பொருளும் தானே வரும் – உன் பெயர் துதித்தால் போதுமே

சனமும் புகழும் தன்னாலே தேடி வரும் உன் பெயர் துதித்தால் போதுமே

தனமும் அழகும் தானே வரும் – உன் பெயர் துதித்தால் போதுமே

    Prof. V. V. Meenakshi Jayakumar

தெய்வத் தமிழ் மொழி

தெய்வத் தமிழ் மொழி

tamil

அருமைத் தமிழ் மொழி

ஆன்மீகத்தின் அருள்மொழி

இயல் இசை நாடகம் கொண்ட மொழி

உயர்ந்த தமிழ் இது

ஊமையையும் பேச வைக்கும்

எண்ணெழுத்துக் கொண்டது

ஏற்றமளிப்பது

ஐங்கரன் தம்பி மொழி

ஒப்பில்லாத தமிழ்

ஓங்குமிசை கொண்ட தமிழ்

ஔவை தெய்வமாம் முருகன் பெயர் கொண்ட மஹா பெரியவா தெய்வத்தின் குரலாய் ஒலித்த மொழி..

தமிழே..   தமிழே..    அன்னையே.

உன்னை வணங்கி வாழ்த்துகிறேன்..

எங்கள் எண்ணத்திலும்,

நாவிலும் செயலிலும் வந்து வாழ்வருள்..

Prof. V. V. Meenakshi Jayakumar

தீபம்

 தீபம்

deepam

அழகு தீபம் ஏற்றி போற்றுவோம்

ஆன்மீக தீபம் ஏற்றி போற்றுவோம்

இல்லம் தோறும் அல்லல் தீர நல் தீபம் ஏற்றுவோம்

ஈசன் முழு வடிவான  தீபம் ஏற்றுவோம்

உயர்ந்து ஒளிவீசும் தீபம் ஏற்றுவோம்

ஊக்கமுடன் உற்சாக தீபம் ஏற்றுவோம்

எண்ணத்தில் அன்பெனும் தீபம் ஏற்றுவோம்

ஏற்றம் பெற்று நன்கு வாழ தீபம் ஏற்றுவோம்

ஐயன் அண்ணாமலையானுக்கு தீபம் ஏற்றுவோம்

ஒரு பதினோரு முறை அண்ணாமலையானுக்கு அரோகரா என்றோதி தீபம் ஏற்றுவோம்

ஓம் தீப மங்கள ஜோதி பாடி தீபம் ஏற்றுவோம்

ஔவை தெய்வம் வடிவில் வந்த காஞ்சி மஹா பெரியவர் சொன்னபடி அன்றாடம் தீபம் ஏற்றி தேவாரம் பாடுவோம்.

   Prof. V. V. Meenakshi Jayakumar

அனுமன்

அனுமன்

hanuman

அஞ்சனை மைந்தன் அனுமன் அவன்

ஆதி சிவனின் அம்சமவன்

இந்துஸ்தானி இசையின் தந்தை அவன்

ஈரெழுத்து மந்திரத்தின் சொந்தமவன்

உண்மை பிரம்மசாரியவன்

ஊதிய தாடை கொண்டவனாம்

எதிலும் எங்கும் இராமனையே

எப்போதும் காணும் கண் கொண்டவன்

ஏழு பிறப்பில்லா சிரஞ்சீவி அவன்

ஐயன் இராமனே அவன் கடவுள்

ஒருமுகப்பெற்ற உள்ளம் கொண்டவன்

ஓங்கி பறக்கும் கொடியில் இருப்பவன்

ஔவை தெய்வமாம் பிள்ளையாருடன்

ஆதிஅந்த பெருமாளாய் அருள்புரிபவன்

காஞ்சி மஹா பெரியவா கண்டுரைத்த மடத்தின் எதிர் தூணில் ஆசி அருள்பவர்  ஜெய் அனுமான்

Prof. V. V. Meenakshi Jayakumar

நதி

நதி

nadi river image

காட்டோரம் ஒரு நதி

காடுகாக்கும் நல்ல நதி

காடுபாக்க போகையிலே

காடுபாக்க போகையிலே – இந்த

காதற் பாட்டு வந்துடுச்சி

தன்னானானனானே தன தன்னானானனானே

காசு பணம் வேணாமின்னு

காதோரம் சேதி சொல்லி

கால் நடையா நடந்து வந்தேன்

கால் நடையா நடந்து வந்தேன் – நான்

காதல் நதியே உன்னைத் தேடி

தன்னானானனானே தன தன்னானானனானே

காலை மாலை இரண்டு வேளை

காவற்காக்கும் சூரியனே

காக்க வரும் சாமி நீயே

காலமெல்லாம் நல்லா வாழ

ஆசி ஒன்னு சொல்லு நீ

ஆறுதலா நில்லு

Prof. V. V. Meenakshi Jayakumar