எங்கே காண்பேன் என் இனிய ஜானகியை

எங்கே காண்பேன் என் இனிய ஜானகியை

எடுப்பு

எங்கே காண்பேன் என் இனிய ஜானகியை

மங்கையரில் புகழ் கொண்ட இனிய ஜானகியை

தொடுப்பு

அங்கே இங்கே தேடி இளைத்தேன்

சங்கு போன்ற கழுத்தை உடைய ஜானகியை

எங்கே

முடிப்பு

பங்கு வேண்டாம் இராஜ்ஜியத்தில்

பாங்குடைய என் ஜானகி போதும்

பொங்கும் இன்பம் தேடி வரும்

வீங்கிள வேனில் போன்ற என் ஜானகி வந்தால் கண்டால் போதும்

Prof. V.V. Meenakshi Jayakumar

வாழி வாழி

வாழி வாழி

hanuman

எடுப்பு

வாழி வாழி அனும – நீ என்றும்

வாழி வாழி அனும

தொடுப்பு

ஆழி சூழ் இலங்கை நகர் வந்து கணை

யாழி எனக்களித்த நீ வாழி வாழி

முடிப்பு

வானரங்கள் தலைவா – இராமநாம

பானமே செய்யும் அனும

ஆன மட்டில் விரைவில் வந்து

மானமுள்ள என்னைக் காக்க இராமனிடம் விரைந்து நீ சொல்

வாழி வாழி

Prof. V.V. Meenakshi Jayakumar

ஓங்கார டமருகம் ஒலி கேட்போம்

ஓங்கார டமருகம் ஒலி கேட்போம்

Shiva

எடுப்பு

ஓங்கார டமருகம் ஒலி கேட்போம்

ஓங்கார டமருக ஒலி கேட்போம் நாமே

ஓடிடும் தீவினை நம்மை விட்டு

ஓங்கார டமருக ஒலி கேட்போம் நாமே

தொடுப்பு

நீங்கிடும் வினையெல்லாம் நன்மையே நடக்கும்

ரீங்காரம் கேட்குமே ரீங்காரமாய்க் கேட்கும் ஓங்கார நாதம்

 – ஓங்கார

 

முடிப்பு

ஏங்காதே மனமே நல்லதே நடக்கும்

பாங்கான சுந்தரி மணாளன் நம்மைக் காப்பான்

தாங்காமல் அழுதால் தயவுடன் பார்ப்பான்

ரீங்கார மந்திரத்தில் மனமும் மகிழ்வான்

– ஓங்கார

Prof. V.V. Meenakshi Jayakumar

பாரதியே சரணம்

பாரதியே சரணம்

எடுப்பு

பாரதியே சரணம் – அம்மா கலை

பாரதியே சரணம்

தொடுப்பு

ஹாரதி எடுத்தோம் உனக்கு மாரதி நீயே

ஹாரதி எடுத்தோம்  உனக்கு மாரதி நீயே

சாரதியாய் இருந்து என் கலை வாழ்வை நடத்து நீயே

சாரதியாய் இருந்து கலை வாழ்வு நடத்து

முடிப்பு

அங்கத்தில் கலைகளை கொண்டவளே சரணம்

சங்கத்தில் திருவையும் கொண்டவளே சரணம்

திங்களைத் தலை கொண்ட நாயகி தோழியே

மங்களம் அளிப்பாய் நாரதன் தாயே சரணம்

Prof. V.V. Meenakshi Jayakumar

எல்லையில்லாத இன்பம் தருவாய்

எல்லையில்லாத இன்பம் தருவாய்

Shiva

எடுப்பு

எல்லையில்லாத இன்பம் தருவாய்

ஈசா ஈசா என் உயிர் ஈசா

தொடுப்பு

இல்லை இனி துன்பம் என்று நீ சொல்வாய் (2)

அல்லும் பகலும் என்னை காத்து ரக்ஷிப்பாய் (2)

எல்லையில்லாத

முடிப்பு

மன்றுள் ஆடும் மாணிக்க தேவே

கன்று நான் என்றும் உனக்கே காத்திடுவாய்!

அன்றும் இன்றும் நீயே என் தலைவன்

நன்றும் தீதும் உன் செயலாகும் நான் செய்யும்

நன்றும் தீதும் உன் செயலாகும்.

எல்லையில்லாத

Prof. V.V. Meenakshi Jayakumar

மானே மானே

எடுப்பு

மானே மானே கோபம் ஏனோ?

தேனே தேனே உனையே தேடி வந்தேன் நானே – மானே மானே

தொடுப்பு

மாசில்லா மனம் கொண்ட உயிர்த் தோழி நீயே

தூசில்லா செயல் புரிபவளும் நீயே

காசில்லாதவரை கண்கொண்டு காணுமோ – உலகம்

ஏசில்லாதபடி எனைக் காக்கும் உன் கருணை ஏனோ?

முடிப்பு

மந்த நாசம் செய்யும் முறுவல் கொண்டாயோ

அந்த அன்னம் பழி சொல்லும் நடையும் கொண்டாயோ

பந்த பாசமெல்லாம் பல நூறு தந்தாயே

சொந்தமான பின்பும் தயக்கம் இனி ஏனோ?

– மானே

Prof. V.V. Meenakshi Jayakumar

அம்பலத்தரசே

அம்பலத்தரசே

எடுப்பு

ஆடி பாடி உன்னை நான் பணிந்திட

ஆசி கூறுவாய் அம்பலத்தரசே

தொடுப்பு

கூடி நாடி உன்னை சேவித்து மகிழவே

தேடி ஓடி வந்தேன் தேவாதி தேவனே

முடிப்பு

ஈடில்லாத ஒரு கலைத் தெய்வமே

ஏடில்லாத படி வாழ்வை மாற்றுவாய்

சாடி பாடும் என்னை காத்து அருளவே

ஓடி பாடி வரும் மீனாளைக் காத்திடு

Prof. V.V. Meenakshi Jayakumar

அச்சோபதிகம்

அச்சோபதிகம்

முக்தி நெறி அறியாத மூர்க்கரொடும் முயல்வேனைப்

பக்தி நெறி அறிவித்துப் பழ வினைகள் பாறும் வண்ணம்

சித்தம் மலம் அறுவித்துச் சிவம் ஆக்கி எனை ஆண்ட

அத்தன் எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே.

செம்மை நலம் அறியாத சிதடரொடும் திரிவேனை

மும்மை மலம் அறுவித்து முதல் ஆய முதல்வன் தான்

நம்மையும் ஓர் பொருள் ஆக்கி நாய் சிவிகை ஏற்றுவித்த

அம்மை எனக்கு அருளிய ஆறு ஆர் பெறுவார் அச்சோவே.

நவராத்திரி

நவராத்திரி

 navarathiri

அன்னையர் மூவரின் புகழ் பாடும் நவராத்திரி நல்ல

ஆசைகளை நிறைவேற்றும் நவராத்திரி

இனிமையான ஒன்பதுநாள் நவராத்திரி நமக்கு

ஈகைகுணம் வளர்ந்திடும் நல் நவராத்திரி

உள்ளத் துன்பம் போக்குவது இந்நவராத்திரி

ஊர் உலக மக்கள் மகிழும் நவராத்திரி

எண்ணியபடி வரம் தருவது நவராத்திரி நம்

ஏக்கத்தினை போக்குவது புனித நவராத்திரி

ஐயமற்ற அன்பை அனைவருக்கும் அளிப்பது நவராத்திரி

ஒற்றுமையை வளர்ப்பது இந்நவராத்திரி

ஓங்குபுகழ் அளிப்பது மூன்று நவராத்திரி

ஔவியம் பேசா பெண்களின் பண்டிகை நவராத்திரி

Prof. V.V. Meenakshi Jayakumar

திரு. பா. முத்துக்குமார சாமி ஐயா

திரு. பா. முத்துக்குமார சாமி ஐயா

அன்பானவர் மிக பண்பானவர் ஐயா.

ஆற்றலின் வடிவமே உருவானவர் ஐயா

இனிய தமிழிசையை என்றும் இசைத்தவர் ஐயா

ஈசனை போலவே குருவை பணிந்தவர் ஐயா

உலக இச்சைகளில் சிக்காதவர் ஐயா

ஊர் உலகம் போற்றும் படி வாழ்ந்து மறைந்தவர் ஐயா

எண்ணத்திலே எப்போதும் தமிழிசையை

ஏற்றமான வாழ்வினை பல மாணவர்களுக்கு தந்தவர் ஐயா

ஐயா என்றே அனைவராலும் போற்றப்பட்டவர்

ஒரு புகழ்மிக்க குடும்பத்தின் தலைவரானவர் ஐயா

ஓங்கார இசை நாதத்தை என்றும் பாடியவர் ஐயா

ஔவை தெய்வம் முருகனின் பாதத்தில் சேர்ந்தவர்

காஞ்சி   மகா    பெரியவரின்    ஆசி    பெற்ற    ஐயா   சங்கீத  பூஷணம்  திரு. பா. முத்துக்குமாரசாமி அவர்களின் புகழ் என்றும் வாழ்க! வாழ்க !

நன்றி,

அன்புடன்   பேரா. வே.வெ. மீனாட்சி

Prof. V.V. Meenakshi Jayakumar