கந்தனே முருகா

கந்தனே முருகா

karthikeyan

 

மெட்டு: அயிகிரி நந்தினி                          தாளம்: ஆதி

கந்தனே முருகா கருத்தினில் நிறைந்தவா

உன்மேல் நான் பாட ஆசை கொண்டேன்

எனக்கருள் புரிவாய் என் நாவில் வருவாய்

ஏழை நான் பாடுவதை ஏற்றுக் கொள்வாய்

வந்தருள் புரிவாய் வள்ளி மணாளா

பக்தியும், ஞானமும் தந்தருள்வாய்

சுவாமி நாதனாய் வந்தவன் நீயே

சுருதியோடு லயஞானம் தந்திடப்பா

கந்தனே முருகா!

Prof. V.V. Meenakshi Jayakumar

பஜன்

பஜன்

ஆனை முக கணபதியே – எனை ஆள வா

பானை வயிறு கொண்டவா – எனை ஆள வா

கண்ணனின் மருகனே சித்தியின் காதலனே

விண்ணோர்கள் தேவனே புத்தியின் கணவனே

தண்மதி ஒளிவிடும் ஜோதியே சுடரே

எண்குணம் கொண்டவா – எனக்கருள வா  நீ வா

Prof. V.V. Meenakshi Jayakumar

பாடும் வண்டாகு

பாடும் வண்டாகு

பல்லவி

பாடும் வண்டாகு  –  இசை

பாடும் வண்டாகு –  என் மனமே

அனுபல்லவி

ஆடும் நாயகனின் இன்ப புகழை – தினந்தோறும்

பாடும் வண்டாகு மனமே – பாடும் வண்டாகு – என் மனமே

சரணம்

ஓடும் மன மானை அடக்குவான்

நாடும் நம்மை காத்திடுவான்

வீடும் பேறும் வந்திடுவான்

காடும் செல்லும் வரை உடன் இருப்பான்

வாடும் சித்தம் அதனை தேற்றிடுவான்  – அவனை

Prof. V.V. Meenakshi Jayakumar

மரம்

மரம் வளர்ப்போமே

1 maram

எடுப்பு

மரம் வளர்ப்போமே – நாம் மரம் வளர்ப்போமே

மழை பெறவே நாம் மரம் வளர்ப்போமே

– மரம்

தொடுப்பு

மரங்கள் வாழ முடியும் மனிதர் இல்லாமல்

மக்கள் வாழ முடியுமோ மரங்கள் இல்லாமல்

-மரம்

முடிப்பு

இன்னிசை ஓசை தரும் மரங்களை நாம் வளர்ப்போம்

அன்னை இயற்கை தந்தருளிய மரங்களையே நாம் வளர்ப்போம்

தென்னை போன்ற உயர்ந்து வாழ மரங்களையே நாம் வளர்ப்போம்

தன்னுடைய வாழ்வினையே நமக்கு தரும் மரங்களை வளர்த்து                                                                                                                      வணங்கி  போற்றுவோம்!!

-மரம்

Prof. V.V. Meenakshi Jayakumar

திருவெம்பாவை

unnamed

 

திருவெம்பாவை

இராகம்: பௌளி                  தாளம்: ஆதி

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்து ஒலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே

ஈதேஎம் தோழி பரிசுஏலோர் எம்பாவாய்.

 

 

வேலவா

வேலவா

பன்னிருகை வடிவேலா பறந்தோடி நீயே வா வா

என்னிருகையால் தொழுதேன் உடனே நீ வா வா வா

அன்னத்தில் மேல் அமர்ந்த பிரமனிடம்

உன்னத ஓங்கார பொருள் கேட்பாய்

கன்னத்தில் கைவைத்தவர் தெரியாது என்ற போது

சன்னல் மட்டுமே கொண்ட ஒரு சிறையில் தான் அடைந்தாய்

உலகில் உற்பத்தி உடனே நின்ற போது

அலகில் ஜோதியான அம்பலவாணர் வந்து

தலமான சுவாமிமலையில் சீடனாக அமர்ந்து கேட்டார்

பல்வேறு குரு இருந்தாலும் தகப்பன்சாமி நீயே ஆனாய்

Prof. V. V. Meenakshi Jayakumar

சரஸ்வதி

சரஸ்வதி

எடுப்பு

வீணை வாசிக்கும் கலைவாணி தாயே – காலம்

வீணாக்காமல் நான் கலை பெற அருள்வாய்

தொடுப்பு

ஆணை உன்மேலே தாயே கலை தர வருவாய்

துணையாக வேண்டும் உந்தன் அருள் நிதி கொடையே

முடிப்பு

அணை போல் காத்திடுவாய் – சரஸ்வதி தாயே

கணையாழி போல் வந்து கையில் பலம் தருவாய்

சுணை என அருள் சுரந்து காப்பாய் எனையே

வீணை என் வாழ்வின் ஒரு அங்கமாக மாற – வரம் ஒன்று தருவாய்

Prof. V. V. Meenakshi Jayakumar

கந்தனே

கந்தனே

எடுப்பு

கந்தனே குமரா கார்த்திகை மைந்தா

மைந்தா காத்தருள் புரிவாய் நீயே

தொடுப்பு

கண்ணனின் மருகனே முருகனே குகனே

பண்ணமைத்து பாடும் எங்களைக் காக்க வா

-கந்தனே குமரா

முடிப்பு

விண்ணோர் முதல்வனே உமையவள் புதல்வனே

கண்மணியே வள்ளியின் காதலனே வேலவனே

அண்டமாகி அவனியாகி அறியொனா பொருளதாகி

தொண்டர்தம் குருவுமாகி துகளறு தெய்வமே – முருகனே

சண்முகனே பாம்பன் சுவாமிகளின் தலைவனே

தன்மணி முகம் கொண்ட தெய்வானை நாயகனே

-கந்தனே குமரா

Prof. V. V. Meenakshi Jayakumar

பரசுராமர்

பரசுராமர்

எடுப்பு

பரசுராமர் வந்தார் பார் ஆளும் வேந்தரின் கர்மமதை தீர்க்கவே – பரசுராமர் வந்தார்

தொடுப்பு

அரசர் குலத்தினை அடியோடு ஒழித்திட

கரமதில் கோடாரி கொண்டு தவம் புரிந்த – பரசுராமர் வந்தார்

முடிப்பு

ஜமத்தினி முனிவரின் திருமகனாய் தோன்றி

ஏமத்தில் ஜாமத்திலும் தந்தை சொல் காத்தார்

காமனை அழித்து வைணவ வில் கொண்டார்

ராமனுக்கு தன் வில்லை தந்தருள்  புரிந்த – பரசுராமர் வந்தார்

Prof. V. V. Meenakshi Jayakumar

நல்ல நல்ல செய்தி வரும்

நல்ல நல்ல செய்தி வரும்

நல்ல நல்ல செய்தி வரும் – இனி

நல்ல நல்ல செய்தி வரும்

மெல்ல மெல்ல அமைதி வரும் – இனி

மெல்ல மெல்ல அமைதி வரும்

சொல்ல சொல்ல இனிக்கும் நாமம் – அது ராமனின் திருநாமம்

கொல்ல கொல்ல வரும் யமனை தூர தூக்கிச் செல்லும் திரு நாமம்

Prof. V. V. Meenakshi Jayakumar