அடுப்படியே கோவில் ஆம்படையானே குலதெய்வம் என்று பெரும்பாலான அக்காலத்து பெண்கள் சொல்லி நாம் கேட்டுள்ளோம்.
அதற்கு பின்னால் என்னென்ன காரணம் இருக்கும் என்று ஆராயும் போது பெரும்பாலும் அவர்கள் வெளியே சென்றதில்லை அப்படியே ஆண்கள் சென்ற போதும் பெண்கள் உடன் அழைத்துச் செல்லப்படுவதில்லை ஆண்களால் ஏனெனில் அத்தணை வீட்டு வேலைகள் கொட்டி கிடக்கும். அப்படி இருக்கும்போது அந்த கோவில் அதிலுள்ள தெய்வங்கள் என அனைத்தையும் தங்களுடைய அடுப்படியிலேயே அந்த பெண்கள் வரவழைக்கத் தொடங்கினர்.
எவ்வாறு என்னை பார்க்கும் போது தண்ணீர் பானையில் குலதெய்வம் வாசம் செய்வதாகவும் உப்பு பாத்திரத்தில் லட்சுமி இருப்பதாகவும் அரிசியில் அறியும் சிவனும் இருப்பதாகவும் துவரம் பருப்பில் செவ்வாய் பகவான் செவ்வாய் கிரகமானது இருப்பதாகவும் அஞ்சறைப் பெட்டியில் தனலட்சுமி தானிய லட்சுமி வாசம் செய்வதாகவும் கருதி வழிபட்டனர் இவ்வாறான பொருட்களை பயன்படுத்தும் போது அவர்கள் சுத்தமாக சுத்தம் பார்த்து பார்த்து செய்தனர்.
தினம் தோறும் அடுப்படையில் நுழையும் போதே குளித்துவிட்டு தெய்வீகமாக அதை ஒரு கோவில் அறை போன்ற புனிதமாக கருதி வழிபட்டனர் அதேபோல் இரவு படுக்கச் செல்லும் போதும் சமையலறையை தூய்மை செய்து ஸ்ரீ அக்ஷயம் என்று எழுதி இறைவனை வழிபட்டு பிறகே உறங்கச் சென்றனர் இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் பெண்கள் தங்கள் வீட்டின் சமையலறைக்கு வரப் பழக்கினர். இதனால் என்னவோ அடுப்படியே கோயில் ஆம்படையானே குலதெய்வம் என்ற பொருள் வரும் படி அந்த பழமொழி தோன்றியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது மேலும் அரிசியில் அரியும் சிவனும் வாசம் செய்வதாக கருதினர் எனவே அரிசி கழுவும்போது கூட அரிசி வா அரிசி வா அரிசி வா ஹரி சிவா என்று சொல்லும் போது அரிசி வா அரிசி வா என்பதாக வந்துள்ளது அறியும் சிவனும் ஒன்னு அறியாவ அறியா வாயில் மண்ணு என்பதாக பழமொழி உள்ளது அதாவது ஹரியும் சிவனும் ஒன்று என்று நினைப்பவர்களுக்கு அரிசி அன்னமாக வாயில் வருகிறது அழியும் சிவனையும் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு அது மண்ணாகவே அவர்கள் வயிற்றுக்குள் செல்லும் என்பதாக கருத்தில் கொள்ளலாம் நன்றி வணக்கம்