ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன? இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.
சா
- நதிகளில் சிறந்தது காவேரி இராகங்களில் சிறந்தது
- சங்கீத ரத்னாகரம் இயற்றியவர்
- புகழ்பெற்ற கமாஸ் இராக ஸ்வரஜதியின் தொடக்கம்
- கும்பகோணத்தில் உள்ள வைணவ ஆலயத்தில் உள்ள திருமால் பெயர்
- பந்துவராளி இராகத்தின் தமிழ்ப் பண் பெயர்
- இசையியலுக்கு என்று தனித் தொண்டு புரிந்த பேராசிரியர்
- குரலிசையும் கருவியிசையும் நன்கு வர செய்ய வேண்டிய பயிற்சியை இப்படிச் சொல்வர்
- மாதா பராசக்தி பொதுவாக பாடப்படும் இராகம் (26வது மேள இராகம்)
- கத்ரி கோபால்நாத் வாசித்து வரும் இசைக்கருவி
- மோஷமு கலதாவின் இராகம்