ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?
இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.
கோ
- ஆதிசங்கரர் மூடமனதிற்கு யாரை பஜனை செய்யும் படி அறிவுறுத்தனார்
- வீணை போல் இருக்கும் மரத்துண்டினால் வாசிக்கப்படும் இசைக்கருவி
- கவிக்குஞ்சரதாஸ என்ற முத்திரையில் பாடியவர்
- 11வது மேள இராகம்
- பல்லவி பாடி புகழ்பெற்றவர்
- பசுவின் வாலைப்போல் வரும் யதி
- நவரத்தினங்களில் ஒன்று
- சங்கரன் கோவிலில் தபசு செய்த அம்பாள்
- ஆண்டாளின் மற்றொரு பெயர்
- ……………….. இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்