ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?
இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.
ம
- பொதுவாக கச்சேரிகளின் முடிவில் பாடப்படும் இராகம்
- ஸப்த தாளங்களில் இரண்டாவது தாளம்
- ஸப்த ஸ்வரங்களில் ‘ம’ என்பதன் விரிவாக்கம்
- முருகனின் வாகனம்
- தியாகராஜர் பயன்படுத்தியது 1.தேசாதி தாளம் மற்றொன்று
- பசுவுக்கான தன் மகனை தேர்க் காலில் இட்ட சோழ மன்னன்
- ஸ்ரீ கணநாத என்று தொடங்கும் கீதத்தின் இராகம்
- இறைவன் பல திருவிளையாடல்கள் புரிந்த இடம்
- பார்வதி மயிலாக மாறி சிவனை பூஜித்த ஊர்
- ஆழ்வார்களில் ஒருவர்