ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன?
இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.
ப
- நாட்டிய சாஸ்திரம் என்னும் நூலை இயற்றியவர்
- குரலிசை அரங்குகளில் வயலின், மிருதங்கம் போன்ற வாத்யங்களுக்கு பெயர்
- இராகத்தின் பண்டைய தமிழ்ப் பெயர்
- சங்கராபரணத்தின் தமிழ்ப் பண் பெயர்
- விரிபோணி என்று தொடங்கும் அடதாள வர்ணத்தை இயற்றியவரின் முழுப்பெயர்
- நாயக, நாயகி பாவத்தில் உள்ள இசை, நாட்டிய உருப்படி?
- தியாகராஜர் ஆராதனையின் போது பாடுவது / அனைத்துக் கலஞர்களும் சேர்ந்து இசைப்பது
- தோடியின் நேர் பிரதி மத்தியம இராகம்
- வர்ணத்தை நாட்டியத்திற்கு என்று அமைக்கும் போது இப்படி அழைப்பர்
- ஆறுபடை வீடுகளில் ஒன்று