Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

ரொம்ப முக்கியம் ரொம்ப முக்கிய ரொம்ப முக்கியம்

ரொம்ப ரொம்ப முக்கியம் ரொம்பவே ரொம்ப முக்கியம்.

ஓட்டுநர் உரிமம் பெறுதல் முக்கியம் – வண்டி

ஓட்டிட பயிற்சியும் ரொம்பமுக்கியம்

வண்டியின் பராமரிப்பு ரொம்ப முக்கியம் – அது

இருவர் செல்ல மட்டுமே ரொம்ப முக்கியம்

தலைக்கவசம் தலைக்கவசம் ரொம்ப முக்கியம்

விலையில்லா நமது உயிர் ரொம்ப முக்கியம்

சீரான வேகம் அதுவும் ரொம்ப முக்கியம்

சீரான இடைவெளி ரொம்ப முக்கியம்

இருக்கை வார் பட்டை அதுவும் ரொம்ப முக்கியம் –முன்புறம்

இருவருமே அணிவது ரொம்ப முக்கியம்

நெடுஞ்சாலை விதிகள் நமக்கு ரொம்ப முக்கியம் – நம்மால்

யாருக்கும் தொல்லை இல்லை ரொம்ப முக்கியம்

விபத்தில்லா பயணம் அது ரொம்ப முக்கியம்

விலையில்லா நம் உயிர் ரொம்ப முக்கியம்

முதலுதவிப் பெட்டி அது ரொம்ப முக்கியம் – வளைவில்

முந்தாமல் செல்லுவது அதுவும் முக்கியம்

பாதுகாப்பு பாதுகாப்பு ரொம்ப முக்கியம் – நடைபாதையில்

செல்வோரின் வாழ்வும் முகிக்கியம்

போதையில்லா பயணம் அது ரொம்ப முக்கியம் – கைப்பேசி

பேச்சில்லா பயணம் ரொம்ப முக்கியம்

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar