Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

ஓட்டாதீர் ஓட்டாதீர் கவனக்குறைவா

ஓட்டாதீர் ஓட்டாதீர் மதுவினை அருந்தி

ஓட்டாதீர் ஓட்டாதீர் அதிவேகமா

ஓட்டாதீர் ஓட்டாதீர் பயிற்சி இன்றி

ஓட்டாதீர் ஓட்டாதீர் வேடிக்கைப் பார்த்து

ஓட்டாதீர் ஓட்டாதீர் கட்டுப்பாடு இன்றி

ஓட்டாதீர் ஓட்டாதீர் விட்டுக் கொடுக்காமல்

ஓட்டாதீர் அதிக ஒளி எழுப்பி

ஓட்டாதீர் ஓட்டாதீர் ஓய்வு இன்றி

ஓட்டாதீர் ஓட்டாதீர் ஒற்றை விளக்குடன்

ஓட்டாதீர் ஓட்டாதீர் வளைவில் விரைவா

ஓட்டாதீர் ஓட்டாதீர் காப்பீடு இன்றி

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

ரொம்ப முக்கியம் ரொம்ப முக்கிய ரொம்ப முக்கியம்

ரொம்ப ரொம்ப முக்கியம் ரொம்பவே ரொம்ப முக்கியம்.

ஓட்டுநர் உரிமம் பெறுதல் முக்கியம் – வண்டி

ஓட்டிட பயிற்சியும் ரொம்பமுக்கியம்

வண்டியின் பராமரிப்பு ரொம்ப முக்கியம் – அது

இருவர் செல்ல மட்டுமே ரொம்ப முக்கியம்

தலைக்கவசம் தலைக்கவசம் ரொம்ப முக்கியம்

விலையில்லா நமது உயிர் ரொம்ப முக்கியம்

சீரான வேகம் அதுவும் ரொம்ப முக்கியம்

சீரான இடைவெளி ரொம்ப முக்கியம்

இருக்கை வார் பட்டை அதுவும் ரொம்ப முக்கியம் –முன்புறம்

இருவருமே அணிவது ரொம்ப முக்கியம்

நெடுஞ்சாலை விதிகள் நமக்கு ரொம்ப முக்கியம் – நம்மால்

யாருக்கும் தொல்லை இல்லை ரொம்ப முக்கியம்

விபத்தில்லா பயணம் அது ரொம்ப முக்கியம்

விலையில்லா நம் உயிர் ரொம்ப முக்கியம்

முதலுதவிப் பெட்டி அது ரொம்ப முக்கியம் – வளைவில்

முந்தாமல் செல்லுவது அதுவும் முக்கியம்

பாதுகாப்பு பாதுகாப்பு ரொம்ப முக்கியம் – நடைபாதையில்

செல்வோரின் வாழ்வும் முகிக்கியம்

போதையில்லா பயணம் அது ரொம்ப முக்கியம் – கைப்பேசி

பேச்சில்லா பயணம் ரொம்ப முக்கியம்

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

சிவப்பு விளக்க வந்தால் உடனே

வண்டியை நிறுத்திடு

மஞ்சள் விளக்கு வந்தால் உடனே

தயாராய் நின்றிடு

பச்சை விளக்கு வந்த உடனே

மெதுவாக கிளம்பிடு

உன்னை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் கவனம் கொண்டு.

– Prof.Dr.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

குட்டிப் பாப்பா குட்டிப் பாப்பா

சொல்லுவதை கேளு

பட்டி சொக்கா போட்ட பாப்பா

சொல்லுவதைத் கேளு

காவல்துறையில் உள்ளவர்

நண்பர்கள் தானே

ஆவல் கொண்டு சாலை விதிகளை

மதித்து நடந்திடு

குட்டிப் பாப்பா குட்டிப் பாப்பா

-Prof.Dr.V.V.Meenakshi

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

சின்ன சின்ன குழந்தைகளை தனியே வெளியில் அனுப்பாதீர்

பெரிய ஆளாய் வரவேண்டும் அவர் வாழ்க்கையில் விளையாடாதீர்

-சின்ன சின்ன

நில் கவனி செல் என்பது சாலைக்கு மட்டுமல்ல

பல் கலையும் பெற்று மகிழ வாழ்க்கைக்குமானது

– Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety Rules

சாலை விதிகள் பாடல்

வளைவினில் முந்தாதே

வாழ்க்கையை

வளைவினில் முந்தாதே

வாழ்க்கையைத் முடிக்காதே

வாழ்வினில் முன்னேறு

சாலை விதி போற்று

தடைகள் ஏதும் இல்லை வேகத்

தடைகளை கவனித்தால்

அலைபேசி எடுக்காதே

வாழ்க்கையை முடிக்காதே.

சாலையில் அலைபேசி

ஆபத்தாய் முடியும் நீ யோசி

அலை அலையாய் அழைப்பு

அடுத்தடுத்து வரலாம்

அழைப்பது நம் வாழ்வின்

அடுத்ததை முடிக்கலாம்.

-சாலையில் எடுக்கும் அலைபேசி

– Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

Songs on Road Safety – Rules

சாலை விதிகள் – பாடல்

படிக்கட்டு பயணம் வேண்டாம்

தறிக்கெட்ட வாழ்க்கை வேண்டாம் – நமக்கு

விடியட்டும் நம் சமுதாயம்

விழிப்புணர்வே நம் தேவை – படிகட்டு

காவல்துறை நம் நண்பன்

கருத்தினில் கொள்வோம் இதனை

போனால் வராதது உயிரே

சாலை விதிகளை மதிப்போம்

சாக்குபோக்கு எதுவும் சொல்ல வேண்டும்

போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாழ்வோம்

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar Continue reading “Songs on Road Safety – Rules”

Songs on Road Safety – Rules

சாலை விதிகள் – பாடல்

சாலை விதிகளை மதித்தால்

தலை எழுத்து நீளுமே

சாலை விதிகளை மீறினால்

தலை எழுத்து மாறுமே

காலை மாலை எப்போதும்

சாலை விதிகளை பின்பற்று

வேலை வீடு செல்லும்போதும்

சாலை விதிகளை பின்பற்று

சோலை அல்ல நெடுஞ்சாலை

காலை வீசி நடந்திட

சோலை அல்ல நெடுஞ்சாலை

பேசிக் கொண்டு நடந்திட

சாலை தனில் தவிர்ப்போம்

அலைபேசி பயன்பாடு

மாலைதனில் வீடுசென்று

வாயாரப் பேசிடலாம்

-Prof.Dr.V.V.Meenakshi Jayakumar

சங்கு

அகர வரிசையில் சங்கின் பெருமை

அமைதியின் வடிவம் சங்கு ஆழ்கடலில் விளைந்த சங்கு இனிய ஒளி எழுப்பும் சங்கு ஈசன் திருமால் கை அமர்ந்த சங்கு

உயர் மக்களை குறிக்கும் நல்வெண் சங்கு

ஊர் உலகிற்கு நேரம் உறைக்கும் சங்கு

எழுவகை இசையை இணைத்து தரும் சங்கு ஏழுமா கடலில் வளரும் உயர்வலம் புரி சங்கு

ஐவகை நிலத்தில் விளையும் சங்கு

ஒப்புயர்வில்லாத பெருமை கொண்டது வலம்புரி சங்கு ஓங்கி ஒலிக்கும் இசை தரும் சங்கு

ஔடதமாய் பல சமயம் பயன்படும் சங்கு

பேராசிரியர் முனைவர் வே.வெ. மீனாட்சி ஜெயக்குமார்