திருக்குறள்

திருக்குறள்

 

Thiruvalluvar saffronisation triggers political row in Tamil Nadu | Chennai  News - Times of India

அகர முதல என்ற ஆரம்பிப்பது திருக்குறள்

ஆதி பகவன் புதல்வன் எழுதியது திருக்குறள்

இகபர சுகங்களை அறிய வைப்பது திருக்குறள்

ஈதலின் சிறப்பை எடுத்துக் கூறுவது திருக்குறள்

உலகப் பொதுமறையென போற்றப்படுவது திருக்குறள்

ஊடலையும் கூடலையையும் பற்றி உணர்த்துவது திருக்குறள்

எல்லா சமயத்தாருக்கும் நன்று சொல்வது திருக்குறள்

ஏழ்பிறவிக்கும் ஒரு அருமருந்தாவது திருக்குறள்

ஐயம் திரிபுற அனைத்துமாய் திகழ்வது திருக்குறள்

ஒப்புயர்வு இல்லாத ஒரு சிறந்த குறள் திருக்குறள்

ஒழுக்கத்தின் மேன்மையை போதிப்பது திருக்குறள்

ஓ இதுவே தமிழ்வேதம் என்று போற்றம்படுது திருக்குறள்

ஓதி உணர்ந்து செயல்படுத்த வேண்டியது திருக்குறள்

ஔவையால் தேவர்குறள் என போற்றப்பட்டது திருக்குறள்.

—-Prof. V.V.Meenakshi Jayakumar

 

kummi paattu

 

கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி)

 

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி)

 

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி)

  • Bharathiyar

Kaavadi Sindhu song

அழகு தெய்வமாக வந்து—

காவடிச் சிந்து—செஞ்சுருட்டி

 

How Murugan, Idumban and Kavadi came to Palani

அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்

ஆதி சக்தி அன்னை தந்த பாலன் — அவன் 

அசுரர் தம்மை வென்ற வடிவேலன்நல்ல 

அமுதம் என்னுமோர் தமிழில் பாடிடும்

அன்பர் வாழவே கருணை செய் குஹன்

அரனார் குருவாம் உயர் ஸீலன்என்றும்                                                                                   அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்

குழந்தையாகக் குமரனாகக்

கோவணாடைத் து­றவியாகக்                                                      கோலம் கொள்ளும் காக்ஷி என்ன சொல்வேன்?– கண்டு                                                                கூறும் மாய வினைகள் யாவும் வெல்வேன்– இந்தக்                                                                  குவலயத்திலோர் கலியுகப் பெருவரதனாய்த்

திகழ்ந்தருளும்  கந்தனைக்                           கும்பிட்டென்றன் பிணிகள் நீங்கி மகிழ்வேன்- உள்ளக்                                                                குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்

 

நீல மயில் மீதில் ஏறி ஆவினன்குடியில் தோன்றும்

நிமலனாம் குழந்தை முருகேசன் — அவன்                                                                                                           நித்திலப் புன்முறுவல் வள்ளி நேசன் – இந்த

நீள் நிலந்தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் தூரன்
நெஞ்சை நீங்காதென்றும் அங்கு வாசன்

This song is taken from the book “Murugan Arulmani Malai  – Periasamy Thooran