ஓரெழுத்தில் ஒளிந்திருப்பது என்ன? இது உங்களின் பொது இசை அறிவை சோதிக்கும் போட்டி. இங்கு ஒரு எழுத்து மட்டும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது. பத்து கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளுக்கான விடைகள் அனைத்தும் அந்த எழுத்துலேயே ஆரம்பமாகும். அது ஒரு இராகத்தின் பெயராகவோ, ஒரு இசைக் கலைஞரின் பெயராகவோ, இசைத் துறையை சார்ந்தவர்களின் பெயராகவோ, இசைக்கருவியின் பெயராகவோ, இசையியல் தொடர்பான இசைக்கலைச் சொற்களாகவோ, இசை நூல்கள் அவற்றின் ஆசிரியர்கள் பெயராகவோ, இசை சார்ந்த ஒரு இடத்தின் பெயராகவோ இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து பதில்களை நிரப்புங்கள் சரியான பதில்களை விரைவாக கண்டுபிடித்தல் உங்களுக்கு நீங்களே ஒரு “சபாஷ்” போட்டுக் கொள்ளுங்கள்.
ஆ
- அவ்வைப்பாட்டி அருளியது
- பன்னிரண்டாவது சக்கரத்தின் பெயர்
- கருணாமிருத சாகரம் எழுதியவர்
- திருவையாறில் நடைபெறுவது ‘தியாகராஜ………”
- இராகத்தில் ஒன்று அவரோகம் மற்றொன்று
- எளிமையான அடிப்படைத் தாளம்
- திருப்பாவை பாடியவர்
- வைணவப் பெரியோர்கள் பன்னிரு ———————
- சியாமா சாஸ்திரிகளின் சொத்து ……………………………. ராகம்
- சுந்தரரின் மற்றொரு பெயர்